மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " 8.65 லட்சம் கோடி வாராக்கடன் ரூ. 7.90 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. வங்கிகளில் ரூ.250 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்களை கண்கானிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடட் வங்கி, ஓரியண்டல் வணிக வங்கி ஆகியவை இணைக்கப்பட்டு நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக ஆக உள்ளது. இந்த வங்கியின் மதிப்பு 17.95 லட்சம் கோடியாகும். கனரா வங்கி, சின்டிகேட் வங்கியுடன் இணைக்கப்பட்டு நாட்டின் நான்காவது பெரிய பொதுத்துறை வங்கியாக ஆக உள்ளது. இதன் மதிப்பு ரூ. 15.20 லட்சம் கோடியாகும்.
யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆந்திர வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை இணைக்கப்பட்டு நாட்டின் ஐந்தாவது பெரிய பொதுத்துறை வங்கியாக ஆக உள்ளது. இந்தியன் பேங்க், அலகாபாத் வங்கி ஆகியவை இணைக்கப்பட்டு நாட்டின் ஏழாவது பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ளது. இதன் மதிப்பு ரூ. 8.08 லட்சம் கோடியாகும். இந்த அறிவிப்பின் மூலம் 27 பொதுத்துறை வங்கிகள் தற்போது 12ஆக குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.