ETV Bharat / bharat

இந்தியா வரும் 5 ரஃபேல் விமானங்கள்! - பிரான்ஸிலுள்ள இந்திய தூதரகம்

டெல்லி: பிரான்ஸிலிருந்து புறப்படும் ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் ஜூலை 29 ஆம் தேதி ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படைக் கடற்படையில் சேரவுள்ளன.

new-rafales-to-fly-out-of-france-to-join-indian-fleet

author img

By

Published : Jul 27, 2020, 5:52 PM IST

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா பிரான்ஸுடன் ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கும் வேளையிலும் திட்டமிட்டபடி, ஜூலை மாத இறுதிக்குள் இந்தியாவிற்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட விமானங்கள் அனுப்பப்படும் என பிரான்ஸ் அறிவித்திருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் பேரில் தற்போது இந்தியாவிற்கு ரஃபேல் விமனாங்கள் வழங்கப்பட இருக்கிறது. பிரான்ஸிலிருந்து புறப்படும் ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் ஜூலை 29 ஆம் தேதி ஹரியானாவில் உள்ள அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படைக் கடற்படையில் சேரவுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு விமான தளத்தில் இந்த விமானங்கள் பிரெஞ்சு விமானப்படை டேங்கர் விமானங்களால் எரிபொருள் நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸிலுள்ள இந்திய தூதரகம், “விமானங்கள் பயணப்படுவதற்கு வாழ்த்துகள். இந்தியாவிற்கு பாதுகாப்பான விமானங்களை வழங்குவதில் மகிழ்ச்சி” எனக் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.