ETV Bharat / bharat

6 உலக மொழிகள், 22 இந்திய மொழிகளில் பிரதமரின் இணையதளம்

author img

By

Published : Jul 24, 2020, 11:44 AM IST

டெல்லி: ஐநாவின் 6 மொழிகள், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் பிரதமர் மோடியின் இணையதளம் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மோடி
மோடி

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஈடுபாடு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார். இணையத்தின் மூலம் மக்களுடன் தொடர்பு கொள்வதில் ஆர்வம் காட்டும் பிரதமர், தனது சக மக்கள் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்களையும் இந்த யுக்தியை பயன்படுத்துமாறு அறிவுறுத்திவருகிறார்.

அவரின் அதிகாரப்பூர்வ இணையதளம் தற்போது முக்கியமான 12 மொழிகளில் மட்டும் இயங்கிவருகிறது. அதை தற்போது வெகுவாக மேம்படுத்தும் திட்டத்தில் அரசு முனைப்புக் காட்டியுள்ளது. அதற்கான பரிந்துரையை தேசிய இ-நிர்வாக பிரிவுக்கு அரசு தற்போது மேற்கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளான(6) அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய, ஸ்பானிஷ் மொழிகளிலும், இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளான(22) அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிபூரி, மராட்டி, நேப்பாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளிலும் பிரதமரின் இணைதளத்தை இயக்க அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வடிமைப்பிற்கான திட்ட வரைவை வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'மக்களிடம் எப்போதும் தொடர்பில் இருக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும்' - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.