ETV Bharat / bharat

தொற்று நோய் திருத்தச் சட்டம் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது - மோடி

டெல்லி : கோவிட்-19 நோய்க்கு எதிராகத் துணிச்சலுடன் போராடிவரும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை தொற்றுநோய் திருத்தச் சட்டம் 2020 உறுதிசெய்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

New ordinance shows our commitment to protect healthcare workers: PM

author img

By

Published : Apr 22, 2020, 11:27 PM IST

Updated : Apr 23, 2020, 10:02 AM IST

நாட்டை சூறையாடிவரும் கரோனா (கோவிட்-19) பெருந்தொற்றை, முன்னின்று எதிர்த்துப் போராடிவரும் மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்களின் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தொற்றுநோய் சட்டம் 1897இல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தொற்றுநோய் திருத்தச் சட்டம் 2020 என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சட்டம் குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "கோவிட்-19 நோயை எதிர்த்துப் போராடிவரும் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளர்களையும் பாதுகாக்கும் நாம், கொண்டுள்ள உறுதியைப் பறைசாற்றும் விதமாகத் தொற்றுநோய் திருத்தச் சட்டம் 2020 அமைந்துள்ளது. பாதிப்பு என்று வரும்போது அதில் சமரசத்துக்கு இடமில்லை" என்றார்.

  • The Epidemic Diseases (Amendment) Ordinance, 2020 manifests our commitment to protect each and every healthcare worker who is bravely battling COVID-19 on the frontline.

    It will ensure safety of our professionals. There can be no compromise on their safety!

    — Narendra Modi (@narendramodi) April 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "மருத்துவர்கள், செவிலியர், துணை மருத்துவர்கள், ஆஷா பணியாளர்கள் என ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளர்களையும் இந்தச் சட்டம் பாதுகாக்க உதவும்" என்றார்.

இந்தச் சட்டத்தின்படி, சுகாதாரத் துறைப் பணியாளர்களின் மீது தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு ஆறு மாதம் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் வழிவகைசெய்கிறது.

இதையும் படிங்க: முகக் கவசங்களை சுத்திகரிக்கும் கருவி - மதுரை இளைஞரின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு

Last Updated : Apr 23, 2020, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.