புதுச்சேரி மாநிலத்தின் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ராய் பி. தாமஸ், அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அவருக்கு கிரண்பேடி வாழ்த்து தெரிவித்தார்.
அத்துடன் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அரசின் முழு ஆதரவையும் தருவதாக உறுதியளித்தார்.
முன்னதாக, புதுச்சேரி அமைச்சரவையில் மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர் பாலகிருஷ்ணனை நியமிக்க முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ராய் பி.தாமஸ் நியமனம்!