ETV Bharat / bharat

இயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி!

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

north east delhi, வடகிழக்கு டெல்லி
north east delhi
author img

By

Published : Feb 29, 2020, 7:29 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி வட கிழக்குப் பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் கடந்த திங்கள் அன்று வன்முறையாக வெடித்தது. இரண்டு நாள்கள் தொடர்ந்த இந்த வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர், துணை ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வட கிழக்கு டெல்லி நிலவரம் என்ன என்பது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த உள்துறை அமைச்சகம், "கடந்த 72 மணி நேரத்தில் அங்கு அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. கலவரம் தொடர்பாக இதுவரை 123 முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன; 25 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்த்பாக், சிவ்புரி உள்ளிட்ட பதற்றமான பகுதிகளில் டெல்லி காவல் துறையினர், சி.ஆர்.பி.எஃப்., எஸ்.எஸ்.பி., சி.ஐ.எஸ்.எஃப். படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, அப்பகுதிகளில் தேசிய கொடி ஏந்திய அணிவகுப்பும் நடந்து வருகிறது" எனக் கூறப்பட்டுள்ளது. நிலைமை இயல்புக்குத் திரும்பியதை அடுத்து அங்கு அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவை உள்துறை அமைச்சகம் திரும்பப்பெற்றுள்ளது.

இதையும் படிங்க : டெல்லி கலவரத்தில் உளவுத்துறை அதிகாரி கொலை பயங்கரவாதிகளின் சதியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.