தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதில் அவர், "தேசிய கல்விக்கொள்கை மாணவர்களின் திறனைக் கட்டமைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துகிறது.
இந்தக் கல்விக் கொள்கை குறித்து ஒட்டுமொத்த நாடே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது கருத்துகளை கல்வி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளனர். இது மிகவும் வரவேற்கத்தகுந்த அம்சமாக அரசு கருதுகிறது" எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு சார்பில் உருவாக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு கடந்த ஜூலை 29ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை வரும் 2022ஆம் ஆண்டுக்குள் அமல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீவிரம் காட்டிவருகிறது.
இதையும் படிங்க: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பில்லை