நாடு முழுவதிலும் உள்ள அரசு, சுயநிதி கல்லூரிகளில் பொது மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.) என மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.
அதன்படி, இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே 5, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனை தேசிய தேர்வு முகமை நடத்தியிருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவு நாளை (5/6/2019) வெளியிடப்பட இருக்கிறது. தேர்வு எழுதிய மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தங்களின் முடிவை தெரிந்து கொள்ளலாம்.