இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்தியளவில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. கரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ஆம் நடைபெற்றது.
நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதிய இத்தேர்வின் முடிவுகளை நேற்று (அக்.17) தேசியத் தேர்வு முகமை அறிவித்தது.
பொதுவாக மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் ((AIQ)/DEEMED/CENTRAL UNIVERSITIES/AIIMS & JIPMER/ ESIC & AFMC (MBBS/BDS) அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக 15 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நடத்தப்படும் கலந்தாய்வு தொடங்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீட் மதிப்பெண் அடிப்படையிலான கலந்தாய்வு வரும் அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
மாணவர்கள் கட்டணங்களை செலுத்துதல் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை https://mcc.nic.in/UGCounselling/Documents/UG-Schedule-for-online-counseling-2020.pdf என்ற இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: ட்ரம்பின் இந்திய விமர்சனம், காங்கிரஸ் சாடல்