சீனாவில் தொடங்கி உலகளவில் பரவிய கொரோனோ பெருந்தொற்று ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இதற்காகப் பெரும்பாலான நாடுகளில் பயணத் தடைகள், கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் ஆரம்பக் கட்டப் புள்ளியான சீனாவில் இதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவருகிறது.
நேற்று உலக சுகாதார அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, உலகளவில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 511 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதில், ஒரேநாளில் 13 ஆயிரத்து 903 பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே சமயம், உலகளவில் 862 பேர் முதல் ஆறாயிரத்து 606 பேர் வரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒப்பீட்டளவில், சீனாவில் ஏற்பட்ட மரணத்தைவிட, ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக உள்ளதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: 'நம்பிக்கை வாக்கெடுப்பைக் கண்டு கமல்நாத் அரசு பயம் கொள்கிறது'