ETV Bharat / bharat

என்டிடிவி நிறுவனர்கள் வெளிநாடு செல்லத் தடை? - பிரனய்

மும்பை: என்டிடிவி நிறுவனர்களை வெளிநாடு செல்லவிடாமல் மும்பை விமான நிலைய அலுவலர்கள் நிறுத்தியதையடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.

prannoy & radhika
author img

By

Published : Aug 10, 2019, 7:40 AM IST

Updated : Aug 10, 2019, 9:57 AM IST

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவியின் நிறுவனர்களான பிரணாய், ராதிகா ராய் ஆகிய இருவரும் தொழில்முறை பயணமாக வெளிநாடு செல்ல மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவரையும் விமானத்தில் செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

பிரணாய், ராதிகா ராயை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று சிபிஐ கேட்டுக் கொண்டதின்-பேரில்தான் மும்பை விமான நிலைய அலுவலர்கள் அவர்களிருவரையும் அனுமதிக்கவில்லை என நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்டிடிவி-யின் ட்வீட்
என்டிடிவி-யின் ட்வீட்

இந்நிலையில், இந்த நடவடிக்கையை எதிர்த்து என்டிடிவி நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அதில், ”இந்த நடவடிக்கை முற்றிலும் ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது. மேலும், இது நிறுவனர்கள் இருவரின் அடிப்படை உரிமைகளையும் பறித்துள்ளது” என்று கூறியுள்ளது.

மேலும், அந்நிறுவனம் பதிவிட்ட சில ட்வீட்களில், இரண்டு ஊடகவியலாளர்களும் வெளிநாடு சென்று 16ஆம் தேதி இந்தியா திரும்புவதற்கான பயணச்சீட்டு (ரிட்டன் டிக்கெட்) வைத்திருந்த போதிலும், பொய்யான ஊழல் குற்றச்சாட்டுக்காக அவர்களை வெளிநாடு செல்ல அனுமதிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் இதுபோன்ற நடவடிக்கையால் ஊடகங்களை தங்கள் வழிக்குக் கொண்டுவர மிரட்டும் நோக்கில் அரசு இதைச் செய்துள்ளது எனவும் கூறியுள்ளது.

Intro:Body:

ndtv

Conclusion:
Last Updated : Aug 10, 2019, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.