புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய வணிகர் கூட்டமைப்பு விழாவில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டில் உள்ள வணிகர்கள் நலனில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வணிகர்கள் நலனைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், நாட்டில் வணிகம் செய்வதற்கான சூழலை எளிமைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் பேசினார்.
மேலும், நாட்டின் சோதனை காலங்களில் வணிகர்கள் திடமாக நின்று அரசுக்கு ஒத்துழைப்பை தருவதாகப் பாராட்டிய ராஜ்நாத் சிங், டிஜிட்டல் வரி தொடர்பான சிக்கல்கள் விரைந்து தீர்க்கப்பட்டு அதற்கான பலன்கள் வணிகர்களுக்கு விரைவில் வந்தடையும் எனவும் உறுதியளித்தார்.
ஜி.எஸ்.டி சிக்கல்களால் சிறுகுறு வியாபாரிகள் கடும் நிதிச்சுமையைச் சந்தித்து வரும் நிலையில் வணிகர்களுக்கு நம்பிக்கையளிக்கும் நோக்கில் மத்திய அமைச்சர்கள் பல்வேறு கூட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்கும் விதத்தில் தொழில்முனைவோரை மத்திய அரசு அணுகி வருகிறது.
இதையும் படிங்க: ஏர் இந்தியாவை விற்க இறுதி வரைவு தயார்