டெல்லி: கொல்கத்தாவில் 300 மணிப்பூர் செவிலியர்கள் வேலைபார்த்து வந்த நிலையில், பாதுகாப்பு உபகரணங்கள், மாத ஊதியம் இன்றி அவர்களை மருத்துவமனை நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பியுள்ளது.
இது தொடர்பான செய்திகள் ஊடங்களில் வெளியாக, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மாநில தலைமைச் செயலாளர் ராஜீவ் சின்ஹாவுக்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாநில சுகாதாரத் துறையின் தகவல்கள் படி, 6000 செவிலியர்கள் மாநிலத்தின் நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்துவருகின்றனர். இதில் 5000க்கும் மேற்பட்டோர் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் கிட்டதட்ட 300 மணிப்பூர் செவிலியர்கள் உள்பட 500 பேர் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
இதில் மணிப்பூருக்கு சென்ற செவிலியர்கள், தங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உபகரங்களும் வழங்காமல், ஊதியமும் வழங்காமல் மருத்துவமனை நிர்வாகங்கள் மனசாட்சி இன்றி நடந்துகொண்டதாக அடுக்கடுக்கான புகார்களை ஊடகத்தின் முன் வைத்தனர்.
இதனை கவனித்த தேசிய மகளிர் ஆணையம், இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கும்படி மேற்கு வங்க தலைமைச் செயலாளர் ராஜீவ் சின்ஹாவுக்கு உத்தரவிட்டுள்ளது.