டெல்லி: குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் இணையத்தில் அதிகம் உலா வருவதைத் தொடர்ந்து கூகுள், ட்விட்டர், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் நிறுவனங்கள் பதிலளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கின்போது தான் குழந்தைகள் ஆபாசப் படங்கள் குறித்த தேடல் அதிகம் இருந்துள்ளது.
ஜூம் செயலியை ஓரம்கட்டும் சமூகவலைதள அரசன்!
மேலும், இணைப்புகள் வழியாக, இது போன்ற தகவல்கள் எளிதில் பரிமாறப்படுவதாகவும், இதனை களைய நிறுவனங்கள் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறது.