இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமான ஐ.எஸ்.எல்.ஆர்.டி.சி மற்றும் என்சிஇஆர்டி ஆகியவற்றுக்கிடையே ஒரு வரலாற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.
காது கேளாத குழந்தைகளுக்கு விருப்பமான தகவல்தொடர்பு வடிவத்தில் இந்திய சைகை மொழியில் கல்வி கற்பதற்கான வழிமுறையினைப் பின்பற்றி சமூக நீதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "இந்தி மற்றும் ஆங்கில வழியில் மாணவர்கள் விரும்பக்கூடிய அனைத்துப் பாடத்திலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான கல்வி அச்சுப் பொருள்களான என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள், ஆசிரியர்களின் கையேடு மற்றும் பிற துணைப் பொருட்கள் மற்றும் வளங்கள் டிஜிட்டல் வடிவத்தில் இந்திய சைகை மொழியாக மாற்றப்படும்.
இந்திய சைகை மொழியில் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள் கிடைப்பதால், செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளும், இந்திய சைகை மொழியில் கல்வி வளங்களை அணுக முடியும் என்பதை இது உறுதி செய்யும். இது ஒரு பயனுள்ள மற்றும் மிகவும் தேவையான வளர்ச்சியை தரக்கூடியதாக அமையும்.
மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களும் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. இது 2020ஆம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கையில் (என்இபி) இந்திய சைகை மொழியின் கல்வி தரப்படுத்துதலை உறுதி செய்யும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி: முழு கள நிலவரங்களின் தொகுப்பு!