ETV Bharat / bharat

ஒடிசா அமைச்சர்கள் சொத்துப் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் நவீன் பட்நாயக்

author img

By

Published : Feb 12, 2020, 7:53 PM IST

Updated : Feb 12, 2020, 9:08 PM IST

புபனேஸ்வர்: ஒடிசா அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் இன்று வெளியானது. இதில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ரூ.64.26 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார்.

Naveen Patnaik news Odisha's richest minister Richest Odisha minister Odisha news ஒடிசா அமைச்சர்கள் சொத்துப் பட்டியல் வெளியீடு முதலிடத்தில் நவீன் பட்நாயக் ஒடிசா அமைச்சர்கள் சொத்துப் பட்டியல் வெளியீடு
Naveen Patnaik is richest among Odisha Ministers

ஒடிசா மாநில அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் இன்று அரசு இணையதளத்தில் வெளியானது. இதில் ரூ.64.26 கோடியுடன் நவீன் பட்நாயக் அமைச்சர்களிலேயே சொத்துகள் அதிகம் கொண்டவராக உள்ளார். இதில் ரூ.63.64 கோடி சொத்துகள் அசையா சொத்துகள் ஆகும். அசையும் சொத்துகள் ரூ.62.66 லட்சம் உள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன் பட்நாயக்கிடம் 1890 மாடல் அம்பாஸிடர் கார் ஒன்றும் உள்ளது. இதன் மதிப்பு எட்டாயிரத்து 905 ரூபாய் மதிப்பிலானது. இதுதவிர அவருக்கு ஸ்டேட் பேங்க் கணக்கில் ரூ.40 லட்சம் பணமும் உள்ளது. அவரிடம் ரூ.2.12 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் உள்ளன.

இதுமட்டுமின்றி பரிதாபாத் திக்ரி கேரா என்ற கிராமத்தில் 22.7 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இது 2017ஆம் ஆண்டு மதிப்பின்படி பத்து லட்சத்து 75 ஆயிரம் மதிப்புக் கொண்டது. இவருக்கு அடுத்த இடத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரதாப் ஜெனாவிடம் ரூ.9 கோடியே 92 லட்சம் சொத்துகள் உள்ளன.

மாநில அமைச்சர்களில் சுகாதாரத்துறை அமைச்சர் நாமா கிஷோர் தாஸ் அரசு அனுமதிபெற்று கைத்துப்பாக்கி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: 600 ஆண்டுகள் பழமையான உருது ராமாயண காவியம்

Last Updated : Feb 12, 2020, 9:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.