ஒடிசா சட்டப்பேரவைக்கான தேர்தல் மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டது. 146 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் 112 இடங்களில் வெற்றிபெற்று பிஜு ஜனதா தளம் மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில் பிஜு ஜனதா தளத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்று கூடி நவீன் பட்நாயக்கை அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் மூலம் ஐந்தாவது முறையாக நவீன் பட்நாயக் ஒடிசாவின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
ஃபோனி புயல் தாக்கம் காரணமாக பதவி ஏற்பு விழா புபனேஷ்வரில் எளிமையாக நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், பிஜு ஜனதா தளத்திற்கு கடும் போட்டி தந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக் ஆதிக்கமே தொடர்கிறது.