ராகுல் காந்தி பதவி விலகி ஒரு மாதம் மேல் ஆன நிலையில், அந்தப் பொறுப்புக்கு யாரையும் நியமிக்காமல் காங்கிரஸ் காலதாமதம் செய்துவருகிறது. மல்லிகார்ஜுன கார்கே, சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரில் ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் நட்வர் சிங் கூறுகையில், "காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி வருவது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் நேரு குடும்பத்திலிருந்து அடுத்தத் தலைவர் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ராகுல் கூறியுள்ளார். அதனால், காங்கிரஸ் தலைவராக பிரியங்கா வர வேண்டுமானால் அவரது குடும்பம் முடிவினை மாற்றிக் கொள்ள வேண்டும்" என்றார்.