ETV Bharat / bharat

தேசிய ஊட்டச்சத்து வாரம்: என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை தெரிந்து சாப்பிடுங்கள்!

ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஊட்டச்சத்து வாரம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஊட்டச்சத்தை பரவ செய்யும் நோக்கத்துடன் 'ராஷ்டிரிய போஷன் மா'வை கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவை ஒரு ஆரோக்கியமான நாடாக மாற்றும் திட்டத்தில் இணைய மக்களை தயாராக்கி வருகிறது

nutrition
nutrition
author img

By

Published : Sep 3, 2020, 7:23 AM IST

”நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்” மற்றும் “நீங்கள் குறைவாக சாப்பிட வேண்டியதில்லை, நீங்கள் சரியாக சாப்பிட வேண்டும்” என்ற வரிகளை பலரும் கடந்து வந்திருப்பீர்கள். அதன் ஆழமான அர்த்தம் என்னவென்றால் ஆரோக்கியமான உடல் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் முக்கியதவத்தை காட்டுகிறது. ஒருவரின் உணவில் இருக்கும் ஊட்டச்சத்து பல நோய்களைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் சிகிச்சையளிப்பதற்கு உதவியாக உள்ளது.அன்றாட வாழ்க்கை முறையை மாற்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் நிச்சயம் தேவை என்பது அனைவரும் தெரிந்த உண்மையாகும்!

மக்கள் மத்தியில் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது குறித்தும் அதனால் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளை குறித்து நிகழ்ச்சிகளும், நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும். அதன்படி, இந்தாண்டு ராஷ்டிரிய போஷன் மா”2020 (Rashtriya Poshan Maah) என்று கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது

போஷன் மாவுக்கு இரண்டு முக்கிய நடவடிக்கைகள் உள்ளன. முதலாவது, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு (SAM) உள்ள குழந்தைகளை அடையாளம் காணுதலும், இரண்டாவது,சமையலறை தோட்டம் திட்டத்தை மேம்படுத்துவதும் ஆகும்.

போஷன் அபியான் திட்டம் பிரதமரால் 2018இல் மார்ச் மாதம் ராஜஸ்தானில் ஜுன்ஜுனுவில் இருந்து தொடங்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ராஷ்டிரிய போஷன் மா 2020 திட்டமானது ஆறு வயது வரையிலான குழந்தைகள், இளம் பருவ பெண்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வாரத்தை விமர்சையாக கொண்டாடுவதன் நோக்கமானது நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் ஊட்டச்சத்து செய்தியை எடுத்துச் செல்வதும், குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உணவு, சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை புரிய வைக்க தான். குறைந்தப்பட்சம் ஆறு மாதங்களுக்கு நிச்சயம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் வேண்டும் என்ற விழிப்புணர்வுகளை தாய்மார்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இது தவிர, போஷன் மாவில் சமையலறை ஊட்டச்சத்து தோட்டங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் சத்தான காய்கறி மற்றும் பழம் தாங்கும் தாவரங்கள் மற்றும் மரங்களை வீட்டிலேயே நடவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறது. நிலம் இல்லாதவர்கள் பானை செடிகள் மற்றும் மொட்டை மாடிகளில் தோட்டங்களை வளர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்பாக தானியங்கள் உதாரணமாக கேழ்வரகு,கம்பு போன்ற சிறுதானியங்கள். மிக முக்கியமாக பழங்கள், காய்கறிகள், கீரைகள் நுண்ணிய ஊட்டச்சத்துக்களின் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன.உதாரணமாக, இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உட்கொள்வது இரத்த சோகையைக் குறைக்க உதவும்.மேலும், சிட்ரஸ் பழங்கள் , மஞ்சள், இஞ்சி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உள்நாட்டில் உற்பத்தியாகும் மற்றும் இருக்கின்ற இடத்திலேயை மலிவாக விளைந்து கிடைக்கின்ற காய்கறிகள், பழங்களை உண்டாலே போதும் தொற்று, நோய்களை எளிதாக விரட்டலாம்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காய்கறிகள், பழங்களை வளர்ப்பதற்கு செப்டம்பர் ஒரு சிறந்த பருவமாக இருப்பதால் இந்தக் காய்கறி வளர்க்கும் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே, நாம் ஒன்றிணைந்து குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு எதிராகப் போராடுவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்வது மட்டுமின்றி மற்றவருக்கும் கற்பிப்பதன் மூலம் தோட்ட உந்துதலை முன்னோக்கி கொண்டுசெல்ல உதவியாக இருக்கும். தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் போஷன் மஹ் இந்தியா முழுவதும் பல தளங்களில் கொண்டாடப்படுகிறது.

அதாவது, ஆன்லைன் மீட்டிங், வெபினார்கள், போட்டிகள், காய்கறி மரம் நடும் புகைப்படங்கள், பலரின் வெற்றிக் கதைகள் பகிர்தல் போன்ற பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியாவை ஒரு ஆரோக்கியமான நாடாக மாற்றும் திட்டத்தில் கைக்கோர்க்க தயாராக இருங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.