இது தொடர்பாக ராஜேஷ் கண்ணா நமது ஈடிவி பாரத்திடம் கூறியதாவது, "மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளேன். இதற்குப் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் அலுவலர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அளவில் தரமான படைப்புகள் வருவதற்கான பங்களிப்பினை தேசிய திரைப்பட மேம்பாட்டுக்கழகம் மேற்கொண்டுவருகிறது. அதில், தொழில்நுட்ப உதவிகள், நிதி பங்களிப்புகள் உள்ளிட்டவை இந்தக் கழகத்தால் வழங்கப்பட்டுவருகின்றன. இது இன்னும் வீரியமாகவும் பரவலாகவும் கிடைக்க வழிவகைச் செய்வேன். குறிப்பாகத் தமிழ் திரையுலகிற்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவேன்" எனக் கூறினார்.
தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டதையடுத்து ராஜேஷ் கண்ணா பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழ்நாட்டின் புதிய மாநிலத் தலைவர் எல். முருகன் ஆகியோரை டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினார்.
இதற்கு முன்பு ராஜேஷ் கண்ணா தமிழ்நாடு பாஜகவின் கூட்டுறவுப் பிரிவுத் துணைத் தலைவராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திரைப்படங்களும் எங்களுக்குப் பாடம்தான்: அசத்தும் காமராசர் பல்கலைக்கழக தொடர்பியல் துறை மாணாக்கர்