'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம் வரும் 27ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பால்கான் 9 ராக்கெட் மூலம் 'ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன்' விண்கலத்தைச் செலுத்துகிறது. இதில், நாசா விண்வெளி வீரர்கள் ராபர்ட் பெஹன்கென், டக்ளஸ் ஹர்லி ஆகியோர் பயணிக்கின்றனர்.
இது குறித்து நாசா வெளியிட்ட அறிக்கையில், "விண்வெளி பயணத்துக்குத் தயாராகும் குழுவினர், 'விமான குழு சுகாதார உறுதிப்படுத்தல்' திட்டத்தின்படி விண்கலம் செலுத்தப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு மருத்துவச் சோதனைக்குள்படுத்தப்படுவர்.
அந்த வகையில், நாட்டில் நிலவும் கரோனா வைரஸ் (தீநுண்மி) அச்சத்தால் விண்வெளி வீரர்கள் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால், விண்வெளிக்குச் செல்லும் குழுவினரின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த உதவுகிறது. இது ஏற்கனவே சர்வதேச நிலையத்திலிருக்கும் மற்ற வீரர்களையும் பாதுகாப்பதற்கான முயற்சியாகும்.
-
Together with @SpaceX, we will return human spaceflight to American soil after nearly a decade. May 27 is not only a big day for our teams – it’s a big day for our country.
— NASA (@NASA) May 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
What does our @Commercial_Crew launch mean to YOU? Share using #LaunchAmerica: https://t.co/6jl1K8JXPI pic.twitter.com/VCNzlRzHYC
">Together with @SpaceX, we will return human spaceflight to American soil after nearly a decade. May 27 is not only a big day for our teams – it’s a big day for our country.
— NASA (@NASA) May 9, 2020
What does our @Commercial_Crew launch mean to YOU? Share using #LaunchAmerica: https://t.co/6jl1K8JXPI pic.twitter.com/VCNzlRzHYCTogether with @SpaceX, we will return human spaceflight to American soil after nearly a decade. May 27 is not only a big day for our teams – it’s a big day for our country.
— NASA (@NASA) May 9, 2020
What does our @Commercial_Crew launch mean to YOU? Share using #LaunchAmerica: https://t.co/6jl1K8JXPI pic.twitter.com/VCNzlRzHYC
தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் குழுவினரைச் சந்திக்க வருபவர்கள் அனைவருக்கும் வெப்பநிலை ஆய்வு பரிசோதனையும், அறிகுறிகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனையும் நடைபெறும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: சமையல்காரருக்கு கரோனா... சுய தனிமையில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் குடும்பம்!