இந்திய கராத்தே சங்கத்தின் (KAI) தலைவர் லிக்கா தாராவுடன் எனக்கு நீண்ட நாள்களாக கருத்து வேறுபாடு இருந்தது என கேஏஐ (KAI) பொதுச்செயலாளர் அம்பேத்கர் குப்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லிக்கா தாரா இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் நரிந்தர் பாத்ராவிடம் முறையிட, அவர் பின்னர் என்னை அழைத்து கராத்தேவை இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிடுவேன் என மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
நரிந்தர் பாத்ரா என்னை அச்சுறுத்திய பின்னர் நான் சில நடவடிக்கைகளை மேற்கொண்டேன். ஆனால் அவருக்கு எதிராக நான் பேசியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக நான் இந்திய ஒலிம்பிக் சங்கம், விளையாட்டு அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளேன்.
இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. லட்சக்கணக்கானோர் கராத்தேவை நம்பியுள்ளனர். அவர்களது கனவை நாசம் செய்யும் எந்த ஒரு நடவடிக்கையும் அரசு ஆதரிக்கக் கூடாது எனவும் அம்பேத்கர் குப்தா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கல்யாணம் நடத்தி 100 பேருக்கு கரோனா பரப்பிய குடும்பம் - ரூ.6.26 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!