ETV Bharat / bharat

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்திப்பு!

author img

By

Published : Sep 2, 2019, 12:15 PM IST

Updated : Sep 2, 2019, 1:33 PM IST

இந்தியா: இந்தியா - சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

xi jinping

இந்தியா - சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த வேண்டும் என்பதில் இருநாட்டுத் தலைவர்களும் முனைப்புடன் உள்ளனர். இதற்காக பிரதமர் மோடி ஏற்கனவே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். தற்போது இரண்டாவது முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி, சீன அதிபருடனான சந்திப்பு வருகின்ற அக்டோபர் 11, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்யும் வகையில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், பாஜக வெளியுறவு பொறுப்பாளர் விஜய் சவுதைவாலே ஆகியோர் நேற்று சீனா சென்று அந்நாட்டு கம்யுனிஸ்ட் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அதில், இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அந்த நாட்டு உயர்மட்டக் குழுவினர், அலுவலர்கள் உடன் வருகின்றனர். முதலில் பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு அவரை அழைத்துள்ளார்.

மேலும், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வரலாற்று சின்னங்கள் அதிகம் உள்ளதால், அங்கு இந்திய, சீன தலைவர்களின் சந்திப்பு நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. காஞ்சிபுரத்திற்கும் சீனாவுக்கும் இடையே வரலாற்று ஆன்மிக தொடர்பு இருக்கும் நிலையில், இதையும் கருத்தில் கொண்டு மோடி, ஜி ஜின்பிங் சந்திப்பை மாமல்லபுரத்தில் நடத்த அலுவலர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பின் இரு நாட்டு தலைவர்களும் காஞ்சிபுரத்தின் புராதன வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிடவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த 2018-ஆம் ஆண்டு மாமல்லபுரம் பகுதியில்தான் ராணுவக் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தது இங்கே நினைவுகூறத்தக்கது.

Intro:Body:
பிரதமர் மோடி _ சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு அக்டோபர் மாதத்தில் சென்னை அருகே மகாபலிபுரத்தில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா - சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த வேண்டும் என்பதில் இருநாட்டு பிரதமர்களும் முனைப்புடன் உள்ளனர். இதற்காக பிரதமர் மோடி ஏற்கனவே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து 2-வது தடவையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதுபற்றி தெரிவிக்கப்பட்டதும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வர விருப்பம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி_ சீன அதிபர் சந்திப்பு அக்டோபர் 11_13 ஆம் தேதிகளில் நடக்கும் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்தியா- சீன அதிகாரிகள் ஒருங்கிணைந்து செய்து வருகிறார்கள்.

இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அந்த நாட்டு உயர்மட்டக் குழுவினரும், அதிகாரிகளும் உடன் வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றில் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி முதலில் தனது தொகுதியான வாரணாசிக்கு சீன அதிபரை வரவழைக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் வாரணாசியில் பெரிய விமானங்கள் தரை இறக்கும் அளவுக்கு நீண்ட ஓடுபாதை கொண்ட வசதி இல்லை. இதையடுத்து தென் மாநிலங்களில் ஏதாவது ஒரு நகரில் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பை நடத்த அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

தென் மாநிலங்களில் எந்த நகரில் கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் சின்னங்கள் அதிகம் உள்ளதோ அங்கு மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பை நடத்தலாம் என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதே சமயத்தில் சீனாவின் பிரமாண்ட விமானம் தரை இறங்கும் வசதியும் வேண்டும்.

ஐதராபாத்திலும் மிகப் பெரிய ஓடுபாதை கொண்ட விமான நிலையம் இருக்கிறது. என்றாலும் சென்னை மற்றும் அதன் அருகே மகாபலிபுரம் பகுதியில் பாரம்பரியத்தை காட்டும் வரலாற்று சின்னங்கள் அதிகம் இருப்பதால் மகாபலிபுரத்தில் இந்திய, சீன தலைவர்களின் சந்திப்பு நடக்க உள்ளதாக தெரிகிறது.

காஞ்சிபுரத்துக்கும் சீனாவுக்கும் இடையே வரலாற்று ஆன்மிக தொடர்பு இருக்கிறது. இதையும் கருத்தில் கொண்டு மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பை மகாபலிபுரத்தில் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள். சந்திப்பு முடிந்த உடன் காஞ்சிபுரம் பகுதியிலும் சுற்றி பார்க்க உள்ளதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தமிழக அரசுடன் கலந்து பேசி வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மகாபலிபுரம் பகுதியில்தான் இராணுவ கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
Last Updated : Sep 2, 2019, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.