லடாக் எல்லைப் பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், எல்லைப் பகுதியில் இரு தரப்பினரும் தத்தமது படைகளைக் குவித்தனர்.
இதற்கு சுமுக தீர்வு காணும் நோக்கில் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த சூழலில், கடந்த திங்கள்கிழமை (ஜூன் 15) அன்று சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது.
சுமார் ஏழு மணி நேரம் நீடித்த இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கல்வான் மோதல் விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைபாட்டை விமர்சித்து, அவர் சீனாவிடம் சரணடைந்து விட்டதாக சாடி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். ஜப்பான் நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரை ஒன்றை மேற்கோள்காட்டி ட்வீட் செய்திருக்கும் ராகுல், "நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி தான்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
Narendra Modi
— Rahul Gandhi (@RahulGandhi) June 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Is actually
Surender Modihttps://t.co/PbQ44skm0Z
">Narendra Modi
— Rahul Gandhi (@RahulGandhi) June 21, 2020
Is actually
Surender Modihttps://t.co/PbQ44skm0ZNarendra Modi
— Rahul Gandhi (@RahulGandhi) June 21, 2020
Is actually
Surender Modihttps://t.co/PbQ44skm0Z
முன்னதாக, கல்வான் மோதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்திய எல்லைக்குள் அந்நியப் படைகள் ஊடுருவவில்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆந்திராவிலும் ஆல்பாஸ் ஆன பத்தாம் வகுப்பு மாணவர்கள்