தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டுக் கலைகளில் ஒன்று சிலம்பாட்டம். இதைப் பேணிக்காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் புதுச்சேரி ஒருங்கிணைந்த சிலம்பாட்டம் கழகம் சார்பில் சாதனை நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு தலைமையேற்று தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”புதுச்சேரி மாநிலத்தில் குத்துச்சண்டை கிராமப்புறங்களில் சிறப்பாக நடக்கும் சிலம்பாட்டம் நமது கிராமப்புறங்களில் பெண்கள் பாதுகாப்பிற்கு உதவும். இது ஒரு சிறப்பான கலை. தெருக்கூத்து, நாடகம் இவையெல்லாம் நம்முடைய பாரம்பரிய கலைகள் இவை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருகிறது.
புதுச்சேரி மாநில அரசு பாரம்பரிய கலையை காக்க வேண்டிய கடமை அரசுக்கும் மக்களுக்கும் உண்டு. சிலம்பாட்டம் கலையில் வெற்றிபெறுபவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க அரசு முயற்சி எடுத்துவருகிறது” என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் முதலமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளர் லட்சுமி நாராயணன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல், அலுவல் கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: