இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை அடுத்துள்ள அவந்திபோரா பகுதியில் பிரிவினைவாத அமைப்புகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த புதன்கிழமையன்று ஏற்பட்ட மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் ரியாஸ் நைகூ தீவிரவாதி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து பள்ளத்தாக்கு முழுவதும் மக்கள் நடமாட்டம் மீது கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரச படைகளின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் குமார் கூறுகையில், ” சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என ஐயப்படும் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் கூடுதலாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மக்கள் நடமாட்டத்தை அனுமதிப்பது, சில பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது போன்ற சில தளர்வுகள் தற்போது அளிக்கப்பட்டுள்ளன. பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் நிலைமை அமைதியாக இருந்ததால் இந்த தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவைகளைத் தவிர மற்ற மொபைல் நெட்வொர்க்குகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. மேலும் இணைய சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன”என தெரிவித்தார்.
கடந்த ஜனவரி முதல் நைகூ உட்பட 76 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மூத்த ராணுவ, காவல் அலுவலர் உள்பட 20 பாதுகாப்புப் படையினரை உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : பஞ்சாபில் சர்வதேச கபடி வீரர் சுட்டுக்கொலை, உதவி ஆய்வாளர் கைது!