மைசூர் ராஜ்யத்தின் 25ஆவது மன்னரான ஜெய சாமராஜா உடையாரின் பிறந்த நாளின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “இந்திய வரலாற்றை வடிவமைத்து, கட்டியெழுப்பியுள்ள ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளின் ஆட்சி, திறமையை நாம் பாராட்ட வேண்டும்.
அப்படி வரலாற்றை உருவாக்கியதில் உடையாருக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இவரின் ஆட்சிக் காலத்தில் ஒரு முற்போக்கான அரசையும், வலுமையான அரசையும் வழிநடத்தி கட்டியெழுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி உடையார் ஒரு ஜனநாயகவாதி. மக்களாக இருக்கட்டும், ஆட்சியாளராக இருக்கட்டும் எப்போதும் அவர்களுடன் உடையார் நல்லுறவை வளர்த்துவந்துள்ளார்.
இப்படி நமக்காக இந்தியாவை கட்டியெழுப்பியுள்ள மன்னர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக, இந்தியாவின் ஒன்றிணைந்து வாழும், செயல்படும் பாராம்பரியத்தை உலகிற்கு எடுத்துரைப்பது மட்டுமின்றி அடுத்த தலைமுறைக்கு கடந்த வேண்டும்” என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க...கரோனா பரிசோதனையில் அமெரிக்கா முதல் இடம், இந்தியா 2ஆவது இடம் -வெள்ளை மாளிகை தகவல்!