ETV Bharat / bharat

கொல்கத்தாவில் ஜே.பி. நட்டா பேரணி

author img

By

Published : Dec 23, 2019, 10:30 PM IST

கொல்கத்தா: இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா கொல்கத்தாவில் பேரணி நடத்தினார்.

Nadda takes out BJP rally in Kolkata in support of CAA

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் சட்டத்துக்கு ஆதரவான பேரணி மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடந்தது.
இந்த பேரணியில் பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா கலந்துக் கொண்டார். கொல்கத்தா நகரின் மத்திய பகுதியான ஷியாம் பஸார் நகரில் பேரணி நடந்தது.
ஜே.பி. நட்டாவுடன், பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களும் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கொல்கத்தாவில் பேரணி

இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்தை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டேன் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குடிமக்கள் தேசிய பதிவேட்டை செயல்படுத்த பாஜக முயற்சி - ஓவைசி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.