ETV Bharat / bharat

பொருளாதார நெருக்கடியும்... சமாளிக்கும் மத்திய அரசும்...! - பாராட்டிய ஜே.பி. நட்டா

டெல்லி: கரோனா வைரசின் இந்தக் கடினமான காலங்களில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பொருளாதார நெருக்கடியைச் சமாளித்து பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 18, 2020, 12:28 PM IST

Narendra Modi  J P Nadda  Coronavirus  Economy  ஜே பி நட்டா  பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா  ரிசர்வ் வங்கி ஆளுநர்
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஜே.பி. நட்டா பாராட்டு!

கரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிக்க பிரதமர் நரேந்திர மோடி எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, ரிசர்வ் வங்கியின் 'ரிவர்ஸ் ரெப்போ' விகிதத்தை குறைப்பது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உதவும் என்று கூறியுள்ளார்.

தற்போதைய நெருக்கடியில் பொருளாதாரத்தை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுக்கும் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் எனவும் இது நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு உதவ நபார்டு வங்கிக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய், இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய், தேசிய வீட்டுவசதி வங்கிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் என மத்திய அரசு நிதி நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜே.பி. நட்டா பதிவிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி ரிவர்ஸ் ரெப்போவை (வங்கிகள் ரிசர்வ் வங்கியில் செலுத்தும் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம்) குறைத்துள்ளது. இது கரோனா நெருக்கடி காலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

மேலும், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இந்த நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா விவகாரத்தை அரசியலாக்கும் ஆந்திர அரசு - பவன் கல்யாண் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.