பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் ஈடுப்பட்டுள்ளன. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அம்மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மதியம் பீகார் சென்றடைந்த அவர், சட்டப்பேரவைத் தொகுதியான பக்சர், அர்ராவில் நடைபெற்ற தேர்தல் பேரணிகளில் ஜே.பி நட்டா உரையாற்றினார். அர்ராவின் மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றினர். பிற்பகுதியில், சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அம்மாநில பாஜக தலைவர்களுடன், நட்டா ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளார்.
அர்ராவில் உள்ள ஒரு தனியார் விடுத்தியில் நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில் மாவட்டத் தலைவர்கள், எம்.பி.க்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிராந்தியத்தைச் சேர்ந்த பிற முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
புதன்கிழமை, பெட்டியா, மோதிஹாரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் பேரணிகளில் உரையாற்றவுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 28, நவம்பர் 3,7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறயுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது.