ETV Bharat / bharat

பிகார் தேர்தல்: களத்தில் பாஜக தலைவர் நட்டா - பிகார் தேர்தல்

பாட்னா: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிகார் சென்றுள்ள பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார்.

நட்டா
நட்டா
author img

By

Published : Oct 11, 2020, 4:28 PM IST

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ஒரு புறம் பாஜக, ஐக்கிய ஜனதா தள கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், மற்றொரு புறம் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளன. தேர்தல் நெருங்கிவருவதைத் தொடர்ந்து, பிகார் சென்றுள்ள பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார்.

நட்டா
நட்டா

கயாவில் நடைபெறவுள்ள பேரணியில் கலந்து கொள்ளும் நட்டா, மக்களிடையே உரையாற்றவுள்ளார். காந்தி மைதானத்திற்கு செல்வதற்கு முன்பு, பாட்னாவில் உள்ள அனுமன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை மேற்கொள்ளவுள்ளார். பின்னர், கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

மாவட்ட தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். முதற்கட்ட தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 243 தொகுதிகள் கொண்ட பிகாரில், ஐக்கிய ஜனதா தளம் 122 தொகுதிகளிலும் பாஜக 121 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.