ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பொறுப்பில் இருந்து விரல் ஆச்சார்யா ஜூன் 24ஆம் தேதி விலகினார். இவருக்கு ஆறு மாதம் பணிக்காலம் இருந்தபோதிலும், பதவி விலகியது பல கேள்விகளை எழுப்பியது.
ரிசர்வ் வங்கியின் மற்றொரு துணை ஆளுநரான என்.எஸ். விஸ்வநாதனுக்கு ஜூலை 3ஆம் தேதி பதவி காலம் முடியவுள்ள நிலையில், அவருக்கு மேலும் ஒரு வருடம் பதவி காலம் நீட்டிப்பு செய்து மோடி தலைமையிலான கேபினட் நியமன குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இவரை தவிர்த்து கானுங்கோ, எம்.கே.ஜெயின் ஆகியோர் துணை ஆளுநராக பதவி வகித்து வருகின்றனர். பாஜக அரசு 2014ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததில் இருந்து ரிசர்வ் வங்கியில் பொறுப்பு வகிக்கும் ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் என பலர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.