உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை, கன்னட எழுத்தாளர் டாக்டர். எஸ்.எல். பைரப்பா தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு, மலர்கள் வழங்கி வணங்கினார். திருவிழாவில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவின் போது, ஒவ்வொரு நாளும் விளையாட்டு நிகழ்சிகள், மல்யுத்தப் போட்டிகள், உணவுத்திருவிழா, புத்தகத்திருவிழா, மலர் கண்காட்சி என விதவிதமான நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, யானை ஊா்வலம் விஜயதசமியன்று நடக்கிறது.
தசரா விழாவைத் தொடர்ந்து, மன்னர் அரண்மனை வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தசரா விழாவோடு, மன்னர் ஜெயராமச்சந்திர உடையாரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவும் நடைபெறுகிறது.

தசரா விழாவில், பேட்மிண்டன் உலக சாம்பியன் பி.வி. சிந்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். தசரா விழாவைக் காண உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: