இசையில் சிறந்த பங்களிப்பை அளித்துவரும் கலைஞருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேரள அரசால் ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட உள்ளது.
அடுத்த மாதம் சுவாமி ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் நடக்கும் விழாவில் இந்த விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது.
ஹரிவராசனம் விருது 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டுவருகிறது. இந்த விருதினை கே.ஜே. யேசுதாஸ், ஜெயவிஜயா, ரவிச்சந்திரன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எம்.ஜி. ஸ்ரீகுமார், கங்கை அமரன், கே.எஸ். சித்ரா, பி. சுசீலா ஆகியோர் ஏற்கனவே பெற்றுள்ளனர்.