மகாராஷ்டிரா மாநிலம், மலேகான் நகரத்தில் அதிகளவில் கரோனா பரவியதால், சிவப்பு மண்டலமாக அடையாளப்படுத்தப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதே பணியை சிறப்பு அலுவலர், சுனில் கதஸ்னே வித்தியாசமான பாணியில் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இவர் திருக்குர்ஆனிலுள்ள இஸ்லாமிய போதனைகள், தீர்க்கதரிசிகளின் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்தித்த சோதனைகள் ஆகியவற்றை எடுத்துரைப்பதன் மூலம் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஒரு இந்து அலுவலரான சுனில், இஸ்லாமிய போதனைகளை மக்களிடையே பரப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சுனில் நாக்பூரைச் சேர்ந்தவர். கடந்த 2014ஆம் ஆண்டு மலேகான் நகரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். ஊழல் தடுப்பு பணியகத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சுனிலுக்கு, 2015ஆம் ஆண்டு 'மகாத்மா காந்தி அமைதி விருது' வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீதிவேண்டி காலில் விழுந்து பட்டியலின தம்பதி: அநீதி இழைத்த அலுவலர் பணி இடைநீக்கம்!