மத்தியப் பிரதேசம் மாநிலம் விடிஷா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கடந்த ஆக்ஸ்ட் 26ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 5 நாள்கள் ஆகியும் குழந்தையை பெற்றோர்களிடம் காட்டாமல் மருத்துவமனை நிர்வாகம் காலம் தாழ்த்தியுள்ளது. இறுதியாக பெற்றோர் வற்புறுத்தலால் குழந்தையை மருத்துவர்களை ஒப்படைக்கையில் குழந்தையின் கை கருப்பு நிறத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில், காலாவதியான மருந்து செலுத்தப்பட்டதால் நிறம் மாறியதாகவும், அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பங்கஜ் ஜெயின் கூறுகையில், "இச்சம்பவம் குறித்த உரிய விசாரணை நடத்தப்படும். குழந்தையின் வலது கை நெக்ரோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போபாலின் ஹமிடி மருத்துவமனையிடம் கலந்துரையாடியதில் சில சமயம் குழந்தையை காப்பாற்ற கைகளை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுலாம்" எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையில், விடிஷா எம்.எல்.ஏ சஷாங்க் பார்கவா முதன்மை சுகாதார செயலாளருக்கு கடிதம் ஒன்றை ஏழுதியுள்ளார். அதில், ”அரசு மருத்துவமனை அலட்சியத்தால் குழந்தையின் கை கருப்பாக மாறியுள்ளது. தற்போது, குழந்தைக்கு போபாலில் சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குழந்தையின் கைகள் அகற்றப்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும். அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக இந்த குழந்தையை அரசாங்கமும் தத்தெடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இச்சம்பவம் முதன்முறையாக இந்த மருத்துவமனையில் நடைபெறவில்லை. முன்னதாக, பல ஆரோக்கியமான குழந்தைகளும் சிறிது நாள்களில் ஏதேனும் பிரச்னை காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது