ETV Bharat / bharat

பிரதமரிடம் நிவாரண உதவி கோரிய ம.பி முதலமைச்சர் - mp chief minister kamalnath calls on pm narendra modi

டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் கமல் நாத் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதிக்கான கோரிக்கையை விடுத்துள்ளார்.

mp chief minister kamalnath calls on pm narendra modi for seeking rain relief fund
author img

By

Published : Oct 4, 2019, 6:44 PM IST

மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல் நாத் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 16 ஆயிரம் கோடி ரூபாய் வெள்ள நிவாரண தொகையை கோரியுள்ளார்.

இந்த சந்திப்பையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், பிரதமர் நரேந்திர மோடியுடன் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளை மீட்பது குறித்து ஆலோசித்ததாகக் கூறினார்.

வெள்ள பாதிப்புகளால் மத்தியப் பிரதேசத்தில், சோயா பீன்ஸ், சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள், சாலைகள், கட்டிடங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை சரிசெய்ய மத்தியப் பிரதேசத்திற்கு தோராயமாக 16 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தொடர் மழை காரணமாக, சேதமடைந்துள்ள பொருட்கள் குறித்த கணக்கெடுப்பை தற்போது நடத்தமுடியவில்லையெனவும், கணக்கெடுப்புகள் முடிக்கப்பட்ட பின்னர் அவை பிரதமரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசு அலுவலர்களைக் காலணிகளால் தாக்கிய பெண்கள்!

Intro:Body:Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.