கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. தற்போது ஊரடங்குகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து குறைந்த அளவு பயணிகளைக்கொண்டும், தகுந்த இடைவெளியினைக் கடைப்பிடித்தும் பேருந்துகளை இயக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் எலவென்ஹாவிலிருந்து இயக்கப்பட்ட பேருந்து ஒன்றில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் 70 பயணிகளுடன் பயணித்ததாகப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேருந்தில் கைகளைக் கழுவுவதற்காக கிருமிநாசினி பொருள்கள்கூட வைக்கப்படவில்லை என்றும், இதில் பயணித்த பிறகு தனக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற செயல்களுக்கு பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழக அலுவலர்களின் பொறுப்பற்றச் செயல்களே காரணம் எனவும் பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கம்