கர்நாடக மாநிலம் உத்தரா கன்னடா மாவட்டத்தில் அசாரகேரியில் உள்ள நிச்சலமக்கி கோயில் அருகே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, லாங்கூர் இன குரங்கு ஒன்று அசார்கேரிக்கு வந்தது. இது குரங்கு கூட்டத்திலிலிருந்து வழிதவறி தெரியாமல் வந்துவிட்டது என அப்பகுதி மக்கள் நினைத்தார்கள். பின்னர் சிறிது காலத்திற்குள்ளாகவே அங்குள்ள வீடுகளுக்குச் சென்று உணவை உட்கொள்ளும் அளவிற்கு அந்த குரங்கு அங்குள்ள மனிதர்களுடன் நல்ல உறவை வளர்த்துக்கொண்டது.
முக்கியமாக, ஆசாரகேரி கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு அரங்கத்திற்கு பலரும் குரங்கை பார்ப்பதற்காக வருவார்கள். இதுவரை அக்குரங்கால் பொதுமக்களுக்கு எந்த ஒரு தீங்கும் நடந்ததில்லை. எனவே அனைவருக்கும் குரங்குடன் நல்ல நட்புறவு ஏற்பட்டுவிட்டது.
உள்ளூர் நபர் வெங்கடேஷா நாயக் அசாரகேரி இது குறித்து பேசுகையில், ”குரங்குகளின் குழு ஒன்று ஒரு மாதத்திற்கு முன்பு காட்டிலிருந்து வெளியே வந்தது. கோயிலுக்கு மேலே குதித்து தாவும்போது இந்த குரங்கு கீழே விழுந்துவிட்டது. எனவே இது இங்கேயே தங்கிவிட்டது. பின்பு இந்த குரங்கு அனைவருக்கும் பிடித்தமான ஒரு ஜீவனாக மாறிவிட்டது" என்றார்.