பீகாரில் ஆளும் கட்சியான ஜக்கிய ஜனதா தளமும் பாஜகவும், நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி வைத்துள்ளனர். இதனால் பீகாரில் இரு கட்சியினரும் சேர்ந்து பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
அதன்படி, பீகார் மாநிலம் தர்பாங்காவில் பிரதமர் நரேந்திர மோடி, ஜக்கிய ஜனதா தள கட்சி தலைவரும் ,பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மோடி, வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே உள்ளிட்ட வசனங்களை எழுப்பினார். அதற்கு மேடையில் இருந்த அனைத்து தலைவர்களும் கைத்தூக்கி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மட்டும் அமைதி காத்தார். மேடையில் இருந்த பிற தலைவர்கள் போல அவரும் கைகளை தூக்கி கோஷம் எழுப்பவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.