தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு அம்மா உணவகம் அமைத்து உணவு அளித்துவருகிறது. இதேபோன்று புதுச்சேரி பாஜக சார்பில் வினோபா நகர் பகுதியில் தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் செல்வகுமார், மோடி மக்கள் உணவகம் என்கிற மலிவுவிலை உணவகத்தை அமைத்துள்ளார். இதனை பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தொடங்கிவைத்தார்.
இங்கு இட்லி 1 ரூபாய், பொங்கல் 10 ரூபாய், டீ 5 ரூபாய் என காலை வேளையிலும் - தயிர் சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வெஜிடபிள் சாதம் எனக் கலவை சாதங்கள் 10 ரூபாய்க்கு மதிய வேளையிலும் விற்கப்படுகிறது.
பொதுமக்கள், ஏழை மக்கள் பயன்பெற இந்த மலிவுவிலை உணவகம் மேலும் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.