ஷலபாஹாசன செய்வதால், தொடையின் தசை விரைவாக குறையும், இந்த ஆசனத்தால் கால் தசை நன்கு கட்டோடு இருக்கும் என முப்பரிமாண வீடியோவில் பின் குரல் ஒலிக்கிறது.
இந்த ஆசனத்தை கர்ப்பிணிப் பெண்கள், அல்சர் இருப்பவர்கள், இதய நோயாளிகள், முதுகு வலி உள்ளவர்கள் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
குழந்தைகளைக் கவரும் அனிமேஷன் காட்சிகளைக் கொண்டதினால் இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 5ஆம் தேதியில் இருந்து பிரதமர் மோடி தொடரந்து யோகாசனங்கள் செய்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.