தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அசாதுதீன் ஓவைசி இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:-
தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கும் பணியை பாஜக தொடங்கி விட்டது. அடுத்து இதனை தந்திரமாக செயல்படுத்த முயற்சிக்கும். இந்தியாவில் 5 சதவீதம் பேர் மட்டுமே கடவுச்சீட்டு (பாஸ்போர்டு) வைத்துள்ளனர்.
நாடு தழுவிய அளவில் குடிமக்களின் தேசிய பதிவேடு (National Register of Citizens-NRC) செயல்படுத்தப்படும் போது, இந்திய மக்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளாவார்கள். நூறு கோடி பேர் வரிசையில் நிற்பார்கள். அவர்கள் எதற்காக வரிசையில் நிற்பார்கள்.
அவர்கள் ஏன் குடியுரிமையை நிருபிக்க வேண்டும். அதை யார் தீர்மானிப்பார்கள் என்பதை பிரதமர் தான் விளக்க வேண்டும். பிரதமர் ஏன் நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அது அவருடைய அலுவலகத்திற்கு பொருத்தமில்லை.”
இவ்வாறு அசாதுதீன் ஓவைசி கூறினார்.
பொதுமக்களை "முட்டாளாக்குவது" மற்றும் குடியுரிமை தேசிய பதிவேடு குறித்து மாறுபட்ட கருத்துக்களை உருவாக்குவது பாஜகவின் கொள்கை எனவும் ஓவைசி குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: 'சந்தைக்கு வந்த புதிய 50-50 பிஸ்கட்' - பாஜக, சிவசேனா குறித்து ஓவைசி கருத்து!