நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் குறித்து மூத்த பொருளாதார நிபுணர் பிரேம் ஷங்கர் ஜா-வுடன் "ஈடிவி பாரத்" பிரத்யேக நேர்காணல் நடத்தியது.
அப்போது பேசிய பிரேம் ஷங்கர் ஜா, "வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என மோடி அரசாங்கம் அளித்த வாக்குறுதி என்ன ஆயிற்று. 11 மில்லியன் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். சுமார் 1 மில்லியன் குறு, சிறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் மோடி அரசாங்கம் பொருளாதாரத்தை புரிந்து கொள்ளவில்லை என தெரிகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலும் தோல்வியை தழுவி உள்ளது. 90 விழுக்காடு நாட்டின் பொருளாதாரம் பண பரிவர்த்தனையை நம்பியே உள்ளது" என்றார்.