ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்தினார். பாகிஸ்தான் நாட்டை குறிப்பிடாமல் அந்நாடு பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு நாட்டுக்கு அல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கே பயங்கரவாதம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. மனிதநேயத்திற்கு ஆதரவாகவும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும்.
உலகுக்கு அமைதியை போதித்த புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வந்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிராக கோபமாகவும், தீவிரமாகவும் குரல் கொடுக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் ஒன்றிணையாதது ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைக்கு எதிரானது. உலக சமயங்களின் நாடாளுமன்றத்தில் விவேகானந்தர் அமைதியையும், நல்லிணக்கத்தையும் போதித்தார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடும் அதனையே உலகுக்கு போதிக்கிறது" என்றார்.