நாடு முழுவதும் 72ஆவது குடியரசு தினம் இன்று (ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் காலையிலிருந்தே 2G சேவை முடக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாலை 6 மணிக்கு பிறகு மீண்டும் இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களை தவிர்த்து மாநிலம் முழுவதும் 4G சேவை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
காஷ்மீரில், குடியரசு தினம், சுதந்திர தினங்களில் பாதுகாப்பை காரணம் காட்டி 2G சேவை முடக்கப்படுவது வழக்கமான ஒன்று.