மகாராஷ்டிரா மாநிலம் தானே கோப்ரியில் புதிதாக திறக்கப்பட்ட ஆயிரம் படுக்கை கொண்ட மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளின் விவரங்கள் மாறியுள்ளன.
இதனைக் கவனிக்காத அலுவலர்கள், கரோனா பாதித்து உயிரிழந்த 72 வயதான மற்றொருவரின் உடலைக் 67 வயதானவரின் உறவினர்களிடத்தில் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து உடலை வாங்கிய உறவினர்களும், ஊழியர்கள் கொடுத்தது போலவே மூடியப்படி கரோனா பாதித்தவர்கள் அடக்கம் செய்வதற்கான வழிமுறைகளுடன் அடக்கம் செய்துள்ளனர்.
இதனையடுத்து 72 வயதானவரின் குடும்பத்தினர் முதியவரை காணவில்லை என புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்திய அலுவலர்கள், உடலை மாற்றிக் கொடுத்தது தெரியவந்துள்ளது.
பின்னர் 67 வயதானவர் உயிரிடன் இருப்பது குறித்து திங்கள் கிழமை (ஜூலை6) அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இருந்தபோதிலும் தீவிர மூச்சு திணறல் காரணமாக 67 வயதான நபர் செவ்வாய்க்கிழமை இரவு (ஜூலை7) உயிரிழந்துவிட்டார்.
இதையும் படிங்க...சீனாவில் இருந்து பேருந்து வாங்கும் திட்டம் மாற்றப்பட்டுள்ளது - டெல்லி அரசு...!