மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸின் சட்டப்பேரவை உறுப்பினர் பிசாஹுலால் சிங் பெங்களூரில் இருந்து போபால் வந்தடைந்தார். கடந்த ஆறு நாள்களாக இவர் மாயமான நிலையில் தனது சொந்த விருப்பத்தின் காரணமாகவே வீட்டை விட்டுச் சென்றதாக விளக்கம் அளித்தார்.
முன்னதாக, மத்திய பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க, அக்கட்சியின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை தன்வசப்படுத்தி பாஜக சதித்திட்டம் தீட்டி வருவதாக, காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் குற்றஞ்சாட்டியிருந்தார். இதை சுட்டிக்காட்டிய பிசாஹுலால் சிங், தனக்கு பாஜக பணம் கொடுக்கவில்லை எனவும், தன்னை பிணைக் கைதியாகவும் வைத்திருக்கவில்லை எனவும் கூறினார்.
மேலும், இதற்கு முன் மாயமான சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஹர்தீப் சிங் டாங், ரகுராஜ் கன்சனா ஆகியோர் விரைவில் வருவார்கள் என பிசாஹுலால் சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க... குழப்பத்தில் காங்கிரஸ், டெல்லி சென்ற கமல்நாத் !