உத்தரப் பிரதேச மாநிலம் பரோலி மாவட்டம் கதீடா கிராமத்தில் எட்டு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் கிடப்பதாக காவல் துறையினருக்கு கிராம ஊராட்சியிலிருந்து தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், சிறுமியின் உடலை உடற்கூறாவிய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக கண்டறியப்பட்டது.
சிறுமி, தனது குடும்பத்தினருடன் கடந்த வெள்ளிக்கிழமை திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்புகையில் குழந்தை காணாமல் போனது பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகாரளித்தனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காணமல் போன சிறுமி அதே கிராமத்தில் உள்ள அனோன்லா என்ற பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்திவருகின்றனர்.