உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஒரு சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக குளத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் சிறுமியை குளத்தின் அருகே உள்ள இடத்திற்கு கடத்திச் சென்று, துன்புறுத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இதையடுத்து, சிறுமி மயங்கிய நிலைக்குச் சென்ற பிறகு இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர், சிறுமியைத் தேடி வந்த பெற்றோர், சிறுமியின் நிலையக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். தொடர்ந்து சிறுமி நினைவு திரும்பிய நிலையில் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில் இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இதில், டெரிபார் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் என்பரை காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும், மற்றோரு நபர் தலைமறைவாகிய நிலையில் அவரைத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கைதுசெய்யப்பட்ட அர்ஜூன், அவரது நண்பர் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.